தற்போதைய செய்திகள்

தூய்மைப்பணியாளர்கள் 200 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள்- முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம் வழங்கினார்

அம்பத்தூர்

ஆவடியில் தூய்மைப் பணியாளர்கள் 200 பேருக்கு அத்தியாவசிய பொருட்களை முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம் வழங்கினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ஆவடி அடுத்த கோவில் பதாகை ஐந்தாவது வார்டு பகுதியில் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள் 200 நபர்களுக்கு அரிசி, கிருமிநாசினி, முக கவசம், 15 வகையான காய்கறிகளை முன்னாள் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அம்மாவின் வழியில் வரும் முதல்வர் எடப்பாடியார் அரசு உங்கள் இன்னல்கள் அறிந்து உங்கள் இல்லத்திற்கு வந்து நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறது.

தயவுசெய்து அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். தனிமைபடுத்துவதன் மூலமே கொரோனா வைரஸை ஒழிக்க முடியும். அரசின் அனைத்து அறிவிப்புகளையும் பின்பற்றுங்கள். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் உயிரிழப்பு குறைந்த அளவே காணப்படுகிறது. அம்மா அவர்கள் வழியில் வரும் கழக அரசின் பல்வேறு துரித நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முல்லை தயாளன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஏ.எம்.சுல்தான், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கே.எஸ்.சுல்தான், ஆவடி மாநகர கழக துணைச் செயலாளர் தங்க குணசேகரன், ஆவடி நகர எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளர் எம்.ஆர்.ஜானகிராமன், திருவள்ளூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் உத்தம ராஜ், வட்ட செயலாளர்கள் ஆர்.வி.கிருஷ்ணமூர்த்தி, சங்கர், பி.எம்.பாஸ்கர், கிளாசிக் குணா, லெனின் கண்ணன், புருஷோத்தமன் ஆனந்தன் விஜயகுமார் பரத்குமார் ஜெராக்ஸ் ரமேஷ் டில்லிபாபு மாலா ரமேஷ் இணையத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் பதாகை 5-வது வார்டு வட்டக் கழக செயலாளர் ஜி.பெருமாள் செய்திருந்தார்.