தற்போதைய செய்திகள்

ஆயிரம் பேருக்கு அத்தியாவசிய பொருட்களுடன் உதவித்தொகை – மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்

காஞ்சிபுரம்

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க கொரோனா தொற்று வைரஸ் பொதுமக்களை பாதிக்காமல் இருப்பதற்கு காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு ஆயிரம் பேருக்கு தேவையான அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாவட்டக் கழகச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், வாலாஜாபாத் பேருந்து நிலைய பகுதியில் தையல் கலைஞர், சலவை தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், இருசக்கர வாகன மெக்கானிக், இசைக்கலைஞர்கள் ஆகியோருக்கு அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் நிவாரண உதவியாக 500 ரூபாய் 300 பேருக்கு வழங்கப்பட்டன.

மேலும் உத்திரமேரூர் ஒன்றியத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள், உட்பட ஏழை எளியவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு ரூபாய் 500 உதவித்தொகை, அரிசி, காய்கறி உட்பட அத்தியாவசிய பொருட்களை காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்.

காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உட்பட அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று கிருமி பரவாமல் இருப்பதற்கு வீதி வீதியாக கிருமிநாசினி தெளிப்பான் மூலம் மருந்துகள் தெளிக்கப்பட்டன. நிவாரண உதவிகளை பெற்றுக்கொண்ட ஏழை எளிய மக்கள் கழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

நிவாரணப் பணிகளின் போது கழக அமைப்புச் செயலாளர் வி.சோமசுந்தரம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள் கே.யு.எஸ்.சோமசுந்தரம், வி.வள்ளிநாயகம், ஆர்.டி.சேகர், தும்பவம் டி.ஜீவானந்தம், அக்ரி நாகராஜன், அத்திவாக்கம் செ.ரமேஷ், கே.பிரகாஷ்பாபு, தங்க பஞ்சாட்சரம், கே.ஆர்.தருமன், என்.பி.ஸ்டாலின், கே.பி.யேசுபாதம், வி.ஆர்.மணிவண்ணன், ஜெயராஜ், வி.பாலாஜி, விஸ்வநாதன், வாசு, கோல்டு ரவி, திலக்குமார் உட்பட ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.