தற்போதைய செய்திகள்

1200 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு 6 டன் அரிசி ஆர்.எஸ்.ராஜேஷ் வழங்கினார்.

சென்னை

வடசென்னை மாவட்டக் கழகம் சார்பில் 1200 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு 6 டன் அரிசியை தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணைய தலைவர் ஆர்.எஸ்.ராஜேஷ் வழங்கினார்.

தேசிய ஊரடங்கு உத்தரவு காரணமாக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழகம் சார்பில் சுமார் 6 டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு ஆதிதிராவிடர் மற்றும் பின் தங்கிய வகுப்பை சேர்ந்த 1200 குடும்பங்களுக்கு வழங்கி, கொரோனா வைரஸ் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

ஆர்.கே.நகர் பகுதி குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளான கொருக்குப்பேட்டை 47-வது மேற்கு வட்டத்திற்கு உட்பட்ட பாரதி நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் 500 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கும், 38 வது வட்டம் நாவலர் குடிசைமாற்று வாரியம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 500 குடும்பங்களுக்கும், கார்னேஷன் நகர் குடியிருப்பில் 200 குடும்பங்கள் உள்பட மொத்தம் 1200 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் பாதுகாப்பு முகக்கவசங்களை சமூக விதிகளை பின்பற்றுதலுடன் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவரும் மாவட்ட கழக செயலாளருமான ஆர்.எஸ். ராஜேஷ், வழங்கினார்.

அப்போது சமூக விதிகளை பின்பற்றி ஆர்.எஸ்.ராஜேஷ், பேசியதாவது:

கொரோனா வைரஸ் தீவிரத்தை தடுக்க பொதுமக்கள் நலன் கருதி முதலமைச்சர் தலைமையில் பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதேபோன்று ஊரடங்கு உத்தரவையொட்டி முதல்வர் வழிகாட்டுதலின்படி வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பெரம்பூர் பகுதியில் நலிந்த ஏழைகள் அனைவருக்கும் அம்மா உணவகத்தில் மாவட்ட கழகத்தின் அறிவுறுத்தலை ஏற்று அதற்கான மொத்த பில் தொகையை செலுத்தி பொதுமக்களுக்கு விலையில்லா உணவுகளை வழங்கி பல்வேறு கொரோனா தடுப்பு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் ஊரடங்கு உத்தரவையொட்டி ஆர்.கே.நகர் பகுதியில் தொற்று நோய் பரவுவதை தடுக்க பொதுமக்களுக்கு சுமார் 18 டன்னுக்கும் மேலாக காய்கறிகளை பத்து நாட்களுக்கு வழங்கப்பட்டன.

இதனைத்தொடந்து மக்கள் சமூக விலகளை கடைப்பிக்க விழித்திரு, விலகிஇரு, வீட்டில் இரு என்ற அரசு விதிகளின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிவாரணத்திற்கான முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் தமிழக அரசு உணர்த்திய சமூக விலகளை கடைப்பிடித்து கொரோனா வைரஸ் தீவிரத்தை தடுக்கவும் நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனில் அனாவசியமாக இளைஞர்கள் வெளியே வருவதை தடுக்க பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி கொரோனாவை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு உறுதி ஏற்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதில் காவல்துறை ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் எம்.நாகூர்மீரான், எம்.என்.சீனிவாசபாலாஜி, மதுரைவீரன், ஏ.வினாயகமூர்த்தி, இராமமூர்த்தி கண்ணன், அமீதா, டி.எம்.ஜி.பாபு, எல்.எஸ். மகேஷ்குமார், இஎம்எஸ் நிர்மல், நெல்லை சக்திவேல், என்.கவுனர்கான், எஸ்.சரவணன், அப்துல்லா, தேவராஜுலு, கே.சீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர்.