சென்னை

கொளத்தூர் அம்மா உணவகங்களில் இலவச உணவு – வீட்டு வசதி வாரிய இணை இயக்குனர் டி.கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு

சென்னை

கொளத்தூரில் உள்ள அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய இணை இயக்குனரும், பெரம்பூர் கூட்டுறவு கட்டிட சங்க தலைவருமான கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு செய்துள்ளார்.

வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய இணை இயக்குனரும், பெரம்பூர் கூட்டுறவு கட்டிட சங்க தலைவருமான கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி கடந்த மார்ச் மாதம் முதல் கழகத்தனர், சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், ஆதரவற்ற நிலையில் உள்ளவர்கள், அனாதை ஆசிரமங்களில் உள்ளவர்கள், நலிவுற்ற ஆட்டோ ஓட்டுனர்கள், குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரிய ஊழியர்கள் ஆகியோர்களுக்கு தினந்தோறும் அரிசி, பருப்பு, உப்பு, எண்ணெய், காய்கறிகள், முககவசம், கையுறை, கிருமிநாசினிகளை வழங்கி வருகிறார்.

மேலும் கொளத்தூரில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக உணவு வழங்க தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்துள்ளார். இதுபற்றி கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஆணைக்கிணங்க பல்வேறு உதவிகளை செய்து வருவதாக கூறினார்.