தற்போதைய செய்திகள்

ஆரணியில் 150பேருக்கு நிவாரண பொருட்கள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, ராந்தம் ஆகிய பகுதிகளில் உள்ள குடுகுடுப்பைகாரர்கள் மற்றும் நலிவுற்றவர்கள் உட்பட 150 பேருக்கு நிவாரணபொருட்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அரசு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள 48 குடுகுடுப்பை காரர்கள் குடும்பத்திற்கும், மேற்கு ஆரணி ஒன்றியம் ராந்தம், விண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள 102 நலிவுற்ற குடும்பங்கள் என மொத்தம் 150 குடும்பங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தனது சொந்த செலவில் தலா 10 கிலோ அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை வழங்கினார். மேலும் ராந்தம், விண்ணமங்கலம் கிராம மக்களுக்கு சுமார் 1000 வீடுகளுக்கு சென்று முக கவசங்கள், கைகழுவ சோப்புகளையும் வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் க.சங்கர், மாவட்ட ஆவின் தலைவர் பாரி பி.பாபு, மேற்கு ஆரணி ஒன்றிய குழுத்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் எம்.வேலு, திலகவதி கன்ஸ்ட்ரக்்ஷன்ஸ் ஏ.ஜி.மோகன், விண்ணமங்கலம் ஊராட்சி தலைவர் காந்தி, வி.ஏ.கே.நகா நிர்வாகிகள் தேவர், கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.