தற்போதைய செய்திகள்

பத்திரிகையாளர் நலனில் அக்கறை கொண்ட கழக அரசு – முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் பாராட்டு

அம்பத்தூர்

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதற்காகவும், அவர்கள் உணவுக்காகவும் அத்தியாவசியப் பொருட்களுக்காகவும் அல்லல்பட கூடாது என்பதற்காகவும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க அரசு தரப்பிலும் கழகத்தின் சார்பிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ஆவடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம் ஒவ்வொரு வார்டாக சென்று பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி, எண்ணெய் மற்றும் முக கவசம், சானிடைசர் ஆகியவற்றை வழங்கி வருகிறார்.

சமீபத்தில் கொரோனா தாக்குதலில் மருத்துவர்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் என தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவே பத்திரிகையாளர்கள் பாதுகாப்பாக செய்தி சேகரிக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தியும், நலிவடைந்த பத்திரிகைகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும் கழக சிறுபான்மையினர் பிரிவு இணை செயலாளருமான எஸ்.அப்துல் ரஹீம் தலைமையில் நடந்தது.

இதில் அம்பத்தூர் ஆவடி திருநின்றவூர் திருவள்ளூர் மாதவரம் பூந்தமல்லி போன்ற பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தலா 25 கிலோ அரிசி, காய்கறி, தொகுப்பு , பாதுகாப்பாக செய்தி சேகரிக்கும் வகையில் முக கவசம் சனிடைசர் , கையுறை போன்றவற்றை முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம், வழங்கினார்.

பின்னர் அவர் கூறுகையில், பத்திரிகையாளர்கள் நலனில் அக்கறை கொண்டது அம்மாவின் அரசும். அம்மாவின் வழியில் வரும் கழக அரசும் தான். எனவே தான் இந்த ஊரடங்கு காலத்தில் தங்களுடைய குடும்பத்தையும் தங்களுடைய உயிரையும் துச்சமென மதித்து களத்தில் நின்று பொதுமக்களுக்கு அரசின் அனைத்து அறிவிப்புகளையும் மற்றும் கொரோனா விழிப்புணர்வு அடங்கிய செய்திகளை வழங்கி வரும் பத்திரிகையாளர்கள் நலனை பேணி காக்கும் வகையில் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்குரிய அனைத்து மருத்துவ செலவை அரசு ஏற்கும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

மேலும் தாலுக்கா செய்தியாளர்கள், மாவட்ட செய்தியாளர்கள் என அங்கீகாரம் பெற்ற அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் அனைவருக்கும் அரசின் நிவாரண நிதியாக ரூபாய் 3 ஆயிரம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். என்றுமே பத்திரிகையாளர்களுக்கு துணை நிற்கும் அரசாக அம்மாவின் அரசு திகழ்கிறது. எனவே செய்தியாளர்கள் ஆகிய நீங்களும் செல்லும் இடத்தில் மிக ஜாக்கிரதையாக இருந்து செய்திகளை பொதுமக்களுக்கு வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முல்லை தயாளன், ஏ.எம்.சுல்தான், கே.எஸ்.சுல்தான், ஆவடி கண்ணன், முகவை சுந்தரம், தங்க குணசேகரன், ஆர்.வி.கிருஷ்ணமூர்த்தி, தேவகி, மதுரை ஆறுமுகம், பானுமதி சிகாமணி, எம்ஆர் ஜானகிராமன், முல்லை சித்தார்த், நாதன், ஜெகநாதன், சார்லஸ், சுசில் பிரான்சிஸ், ஆவடி சங்கர், பி.பாஸ்கர், திலகவதி, பிரகாஷ்,குணா பாபு, கிளாசிக் குணா லெனின் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.