சென்னை

கொரோனா தொற்றை தடுக்க சமூக இடைவெளி மிக அவசியம் – ஆர்.எஸ்.ராஜேஷ் வேண்டுகோள்

சென்னை

கொரோனா தொற்றை தடுக்க சமுகஇடைவெளியை பின்பற்றுவது மிக அவசியம் என்று பொதுமக்களுக்கு வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி ஏற்று தண்டையார்பேட்டை ( 38-வது தெற்கு வட்டம்) நேதாஜி நகர் பகுதியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 450 குடும்பங்களுக்குதலா 5 கிலோ அரிசியுடன் 10 வகையான காய்கறிகள், (40-வது தெற்கு வட்டம்) வ.உ.சி. நகர் பகுதி மாதா கோவில் தெரு பகுதியில் 300 ஏழை குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட நிவாரண தொகுப்பினை வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வழங்கினார்.

அப்போது பொதுமக்களிடையே ஆர்.எஸ்.ராஜேஷ், பேசுகையில்,

கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரம் அடைந்துள்ளதால் இந்திய அளவில் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தமிழகத்தில் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்களின் நலன் கருதி தமிழக முதலமைச்சரின் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதுடன் நோய் தொற்றில் இருந்து தங்களை காத்து கொள்ள தமிழக அரசின் அறிவுரைகளை ஏற்று பலர் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

அதில் ஏழைகள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்க கூடாது என்ற காரணத்தினால் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதார்களுக்கு 20 கிலோ அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் அடங்கிய தொகுப்புடன் அம்மாவின் அரசு ரூ.1000 நிவாரணமாக வழங்கி வருகிறது. மேலும் நோய் தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவையொட்டி பொதுமக்கள் பலருக்கு உணவுக்கான கஷ்டங்களை கருத்தில் கொண்டு அனைத்து அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் விலையில்லா உணவுகளை வழங்கி வருகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலைகளை அறிந்து தமிழக மக்களின் நலனை முழுமையாக பாதுகாக்க கழகம் தலைமையிலான அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. ஆகவே மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயில் இருந்து தங்களை காத்து கொள்ள சமூகஇடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அரசின் அறிவுரைகளை முழுமையாக ஏற்று கொண்டு கொரோனா வைரஸ் தீவிரத்தை ஒழித்து சமூகத்தை காக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.ஜெனார்தனம், ஆர்.வேல்முருகன், முத்துசெல்வம், இ.வேலுமேஸ்திரி, வி.எஸ்.புருஷோத்தமன், எல்.எஸ்.மகேஷ்குமார், டி.பிரபாகரன், ஏ.இளவரசன், இஎம்எஸ் நிர்மல் குமார், டி.எம்.ஜி.பாபு, பி.சேகர், எஸ்.மோகன், கே.ஆர்.வீரமணி, கோவிந்த மேஸ்திரி, செல்வகுமார் மேஸ்திரி, கண்ணன், கரிமேடு செல்வம், நெல்லை சக்திவேல், உள்ளிட்டோர் இருந்தனர்.