திருவள்ளூர்

2 ஆயிரம் பேருக்கு ரூ.10 லட்சத்தில் நிவாரண பொருட்கள் – பொன்னேரியில் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ வழங்கினார்

திருவள்ளூர்

பொன்னேரியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மக்களுக்கு 2000 பேருக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்ட திருநிலை ஊராட்சி கொடிப்பள்ளம் கிராமப் பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு திருநிலை ஊராட்சி கொடிப்பள்ளம் கிராமம்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கே.நீதி ஏற்பாட்டில். திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் தலா 5 கிலோ அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க குடும்பத்திற்கு தலா 500 ரூபாய் வீதம் 2000 பேருக்கு வழங்கினார் .

அதைத்தொடர்ந்து மக்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. மேலும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்து அவர் ஆட்டோ மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி தாங்கள் குடும்பத்தினரை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் கார்மேகம், திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.ராகேஷ், திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இனைசெயலாளர் கே.நீதி, மாவட்ட மாணவரணி என்.மணிநீதி, சிறுணியம் கிளை செயலாளர் விஜயகுமார், சிறுணியம் கிளை பிரதிநிதி கோகுல், மாணவரணி காமேஷ், மாணவரணி சூர்யா மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.