தூத்துக்குடி

கர்ப்பிணி பெண்களுக்கு தாய் சேய் நல பெட்டகம் – போ.சின்னப்பன் எம்.எல்.ஏ வழங்கினார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட குளத்தூர் அரசு மருத்துவமனையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு புரட்சித்தலைவி அம்மாவின் திருக்கரத்தால் துவக்கி வைக்கப்பட்ட தாய்சேய் நல பெட்டகத்தை
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன் எம்.எல்.ஏ கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கினார்

இந்தியாவே வியக்கும் அளவில் கருவுற்ற தாய்மார்கள் கருவுற்ற நாளிலிருந்து குழந்தை பெற்றெடுக்கும் நாள் வரை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் திடகாத்திரமான உடல்வாகுடன் தாயும் குழந்தையும் இருக்கும் வகையில் ஊட்டச்சத்து நிறைந்த தாய் சேய் நல பெட்டகம் என்ற திட்டத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் துவக்கி வைத்து இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்தார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைந்த போதிலும் அம்மாவின் சீரிய வழியை பின்பற்றி அம்மாவின் நல்லாட்சியை வழி நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் தீவிர செயல்பாட்டின் காரணமாக தாய் சேய் நல பெட்டகத்தை தொடர்ந்து கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் தங்குதடையின்றி தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குளத்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போ.சின்னப்பன் எம்.எல்.ஏ, கர்ப்பிணி பெண்களுக்கு தாய் சேய் நல பெட்டகத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முத்துராஜ், சுந்தரி, விளாத்திகுளம் ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் கே.பால்ராஜ், மாவட்ட கவுன்சிலர் நடராஜன், குளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், குளத்தூர் பஞ்சாயத்துத் தலைவர் மாலதி, பஞ்சாயத்து துணைத்தலைவர் மாரிச்செல்வி, குளத்தூர், கழக பிரமுகர் எஸ்.வி.பிச்சைமணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.