தற்போதைய செய்திகள்

கோவில்பட்டியில் ரூ.10 கோடியில் தார்சாலை பணி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் ஆய்வு செய்தார்

தூத்துக்குடி

கோவில்பட்டி நகரத்தில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் தார்சாலை பணிகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் ஆய்வு செய்தார்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிரேசன் கோவில் பிரதான மெயின் ரோட்டில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை சீரமைக்கும் திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை, வடக்கு மாவட்ட செயலாளரும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ நேரில் ஆய்வு செய்தார்.

அதில் ஒன்றான கதிரேசன் கோவில் மெயின் ரோட்டில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பார்வையிட்டார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ மேலும் வெங்கடேஸ்வரா நகர் குறுக்கு தெருவிலும் காளியம்மன் கோவில் குறுக்கு தெருவிலும் ஏ.கே.எஸ் தியேட்டர் பிரதான சாலையிலும் மந்தித்தோப்பு ரோடு ஸ்ரீராம் நகர் 1-வது தெருவிலிருந்து 5-வது தெரு வரையிலான சாலைகளிலும் தற்போது தார்சாலை அமைக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஆவின் பால் இயக்குநர் நீலகண்டன் கார்த்திகேயன், மாவட்ட வர்த்தக அணி தலைவரும், தனலட்சுமி ஹோட்டல் உரிமையாளருமான ஜே.விஜயகுமார் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.