தற்போதைய செய்திகள்

கழக செய்தி தொடர்பாளர் மருதுஅழகுராஜ் ஏற்பாட்டில் அரசு அலுவலகங்களுக்கு 50 தானியங்கி கிருமிநாசினி இயந்திரங்கள் – அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காந்தி சிலை அருகில் திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட அரசு அலுவலகங்களுக்கு 50 தானியங்கி கிருமிநாசினி இயந்திரத்தை கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் ஏற்பாட்டில் கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரிய துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை மத்திய அரசு, உலக சுகாதார நிபுணர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் என அனைத்தும் பாராட்டி இருக்கின்றனர். நாட்டிலேயே கொரோனா வைரஸ் தொற்று இறப்பு விகிதத்தை குறைத்து மக்களுக்கு பாதுகாப்பான மருத்துவ வசதிகளை செய்து வருகிறது. தமிழக அரசு. கழகத்தின் சார்பாக மக்களுக்கு உதவிட கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க, தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை மக்களின் சேவகனாக பல உதவிகளை வீடுதோறும் வழங்கினர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் சுமார் 25 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கழகம் சார்பில் தலா 5 கிலோ அரிசி மற்றும் 5 கிலோ மளிகை பொருட்களை கழக செய்தி தொடர்பாளரும், நமது அம்மா பத்திரிகை ஆசிரியருமான மருது அழகுராஜ் வழங்கினார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசுக்கு உறுதுணையாக இருக்கும் மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை என அரசு சார்ந்த துறைகளுக்கு அவர்களின் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலன் கருதி திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட சுகாதார நிலையங்கள், காவல் நிலையங்கள், வருவாய்த்துறை அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், வங்கி நிலையங்கள் என மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க கழகம் சார்பாக தானியங்கி கிருமிநாசினி எந்திரத்தை மருது அழகுராஜ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், பாம்கோ தலைவர் ஏ.வி.நாகராஜன், ஆவின் தலைவர் அசோகன், வட்டாட்சியர் ஜெயலட்சுமி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், நகரச் செயலாளர் இப்ராஹிம்ஷா, பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், கல்லல் ஒன்றிய துணைத் தலைவர் நாராயணன், மாவட்ட பிரதிநிதி சிவா, இளைஞரணி நாகராஜ் என திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.