தற்போதைய செய்திகள்

குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆய்வு

சென்னை

குடிசைமாற்று வாரிய குடியிருப்பு திட்ட பகுதியில் அதிகாரிகளுடன் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை ஆர்.கே.நகர் பகுதி 39-வது வட்டத்திற்குட்பட்ட பூண்டி தங்கம்மாள் தெரு குடிசைமாற்று வாரிய திட்ட பகுதி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த 1978-79-ம் ஆண்டில் 512 வீடுகள் கட்டப்பட்டு தற்போது அது சிதிலடைந்து உள்ளதால் புதிய கட்டுமான திட்டத்தின் கீழ் குடிசை மாற்று வாரியத்தால் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வீடுகளில் உள்ள குடியிருப்பு வாசிகளை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் கொரோனா காரணமாக அப்பகுதி மக்கள் கால அவகாசம் கேட்டு வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து அவர் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அவகாசம் கொடுக்கப்பட்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் சுகாதார துறை அதிகாரிகள் உள்பட பலர் இருந்தனர்.