தற்போதைய செய்திகள்

2000 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

வேலூர்

வேலூர் மாநகராட்சி சேண்பாக்கம் பகுதியில் 2000 ஏழை எளிய குடும்பங்களுக்கும், 52 தூய்மை பணியாளர்களுக்கும்
நிவாரண உதவிகளை வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி வழங்கினார்.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலூர் மேற்கு பகுதி கழகம் சேண்பாக்கம் ஊராட்சியில் 52 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 2 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.ஜெயபிரகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி கலந்துகொண்டு 52 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் தொகுப்பு, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கினார். பிறகு அப்பகுதியில் உள்ள 2000 குடும்பங்களுக்கு அரிசி மூட்டை, காய்கறி தொகுப்பு, மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை. அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் எம்.மூர்த்தி, ஆவின் தலைவர் த.வேலழகன், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, மாவட்டக் கழக துணைச்செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனி. பி.சதீஷ்குமார், பகுதி கழக செயலாளர் நாகு, அமலா பிரபா, மாவட்ட மாணவரணி செயலாளர் பிரகாஷ், பகுதி கழக செயலாளர் எஸ்.குப்புசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் எம்.புகழேந்தி, ஜி.கே.முரளி, அப்பு( எ) பிரபு, ஜெகதீசன், டி.மணி, கணேசன், கே.ஆர்.கே.ராஜேஷ், எஸ்.கார்த்திகேயன், சேகர், ஆனந்தன், நித்தியானந்தம், பி.என்.நாகு, பி.குமரன், விஷ்ணு, ஜானகிராமன், மேகநாதன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.