மற்றவை

10 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உத்திரமேரூர் மத்திய ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றிய கழக செயலாளர் தங்க பஞ்சாட்சரம் ஏற்பாட்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட கொரோனா நிவாரண பொருட்களை காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழக செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கித்தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கி வரும் நிலையில் உத்திரமேரூர் மத்திய ஒன்றிய கழகம் சார்பில் நெய்யாடுபாக்கம், வயலக்காவூர், புல்லம்பாக்கம், மெய்யடி ஆகிய பகுதிகளில் உத்திரமேரூர் மத்திய ஒன்றிய கழக செயலாளர் தங்க பஞ்சாட்சரம் ஏற்பாட்டில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை மாவட்டக் கழகச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்.

நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் “உத்திரமேரூர் மத்திய ஒன்றியத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை நாள்தோறும் கழகத்தினர் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இதனால் எங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன.

எனவே தமிழக அரசுக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் பிரகாஷ்பாபு, கழக நிர்வாகிகள் ஓ.வி.வரதன், ரஞ்சித் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.