தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ் – சுகாதாரத்துறை தகவல்

சென்னை 

தமிழகத்தில் ஒரேநாளில் 987 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழகத்தில் புதிதாக 743 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிரத்திலிருந்து வந்தவர்கள் 83. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 13, 191 ஆக உயர்ந்துள்ளது.இன்று மேலும் 3 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 987 பேர் குணமடைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,882 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் தமிழகத்தில் மொத்தம் 7,219 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் நேற்று 11,441 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,43,793 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 557 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.