தற்போதைய செய்திகள்

திருவொற்றியூரில் ஏழை மக்களுக்கு நிவாரண உதவி – அமைச்சர்கள் பா.பென்ஜமின், க.பாண்டியராஜன் வழங்கினர்

அம்பத்தூர்

திருவொற்றியூரில் முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை மக்களுக்கு நிவாரண ஊரகத்தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் வழங்கினர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழை எளியோருக்கு உதவும் வகையில் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய், தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க அம்மா உணவகங்களில் ஊரடங்கு காலத்தில் திருவெற்றியூர் தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு விலையில்லாமல் உணவு வழங்கும் வகையில் முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன் ரூபாய் 6 லட்சம் வரைக்கும் வழங்கியிருந்தார்.

மேலும் திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் வழங்கி வந்தார். இந்நிலையில் தேரடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக தொழில் துறை அமைச்சரும், மதுரவாயில் பகுதி கழக செயலாளருமான பா.பென்ஜமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ஏழை க்களுக்கு
அரிசி, பருப்பு, காய்கறி, பால் பாக்கெட், முக கவசம் ஆகியவற்றை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கே.கார்த்திக் கே.மோகன் சங்கர், கண்ணன், வேலாயுதம், அரசு, புகழேந்தி, லெனின், பாலகிருஷ்ணன், போட்டோ செந்தில் தனசேகர் உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.