தற்போதைய செய்திகள்

அம்பத்தூரில் 2000 பேருக்கு நிவாரணம் – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ வழங்கினார்

அம்பத்தூர்

அம்பத்தூர் தொகுதியில் ஆட்டோ ஓட்டுனர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு என 2 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவியை
மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ வழங்கினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. 25 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் அம்பத்தூர் பகுதி 81-வது வார்டில் உள்ள ஓ.டி.பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள், மாற்றுத்திறனாளிகள் என 2000 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், முகக் கவசம், காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் அடங்கிய 13-வார்டுகளிலும் மாவட்ட கழகத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது. அதே போன்று இப்பகுதியில் தினசரி ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் வருமானமின்றி தவிப்பதை அறிந்து 2000 ஆட்டோ ஓட்டுனர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அரிசி பருப்பு வழங்கி வருகிறோம். இன்று கொரோனா என்னும் கொடிய வைரஸை நாம் வெற்றி கொள்ள வேண்டுமென்றால் அனைவரும் முதலமைச்சரின் தனித்திரு விழித்திரு வீட்டிலிரு என்ற வாசகத்தை மனதில் நிறுத்தி தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு அத்தியாவசியத் தேவை என எங்கு சென்றாலும் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். மேலும் ஆட்டோ ஓட்டுனராகிய நீங்கள் தான் முக்கியமாக முக கவசம் அணிந்து கொண்டு உங்கள் முன்னிருக்கையில் பயணிகளை தயவுசெய்து ஏற்ற வேண்டாம் என்று உங்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் என்.அய்யனார், அவைத்தலைவர் எஸ்.கிருஷ்ணன், துணை செயலாளர் முகப்பேர் பாலன், பகுதி பொருளாளர் கோதண்டம் மாவட்ட மாணவரணி செயலாளர் எம்.டி,மைக்கேல்ராஜ், மாவட்ட பிரதிநிதி கே.பி.முகுந்தன், டன்லப்வேலன், ஹரிகிருஷ்ணன், கே.பாலசுந்தரம், வட்ட செயலாளர் எச்.மோகன், கேபிள் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.