தற்போதைய செய்திகள்

மலைவாழ் மக்களுக்கு நிவாரண பொருட்கள் – அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

வேலூர்

வாணியம்பாடி அருகே நெக்னாமலை கிராமத்திற்கு அமைச்சர் கே.சி.வீரமணி நடந்தே சென்று மலைவாழ் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி, வாணியம்பாடி வட்டம், ஆலங்காயம் ஒன்றியம், நெக்னா மலை கிராமம், தரைமட்டத்திலிருந்து 2500 அடி உயரத்தில் உள்ளது. இங்கு 650க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தரைமட்டத்திலிருந்து மலை கிராமத்திற்கு 7 கிலோமீட்டர் தூரம் உள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு நிலையை கருத்தில் கொண்டு மலைவாழ் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட,
வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சருமான
கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன்அருள், மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகளுடன், மலை கிராமத்திற்கு நடந்தே சென்று ஒன்றிய கழகத்தின் சார்பாகவும், தன்னார்வத்தொண்டு அமைப்பின் சார்பாகவும் நடைபெற்ற நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு தனது சொந்த செலவில் 150 ஏழை குடும்பங்களுக்கு,
மூன்று மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து தன்னார்வலர்கள் அமைப்பின் மூலம் நடைபெற்ற நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
பின்னர் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமினை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்து அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் கபசுர குடிநீரை வழங்கினார்.

மலைவாழ் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி,
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும், மலை கிராமத்திற்கு நடந்தே வந்து நிவாரண உதவிகள் வழங்கிய அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன்அருள், மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோருக்கும் மலைவாழ் மக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, எவட்டாட்சியர் சிவப்பிரகாசம் ,உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் முனுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.