சிறப்பு செய்திகள்

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்கு தடை – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று எதிரொலியாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை ஈடு செய்ய செலவினக் குறைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள உத்தரவு வருமாறு:-

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார சிக்கலை ஈடு செய்ய, தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் புதிய பணியிடங்களை உருவாக்க ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில்

பணியாளர் நியமனக் குழுவின் ஒப்புதல்படி தொடக்க நிலையிலான பணியிடங்களை கருணை அடிப்படையில் நிரப்பிட எந்தத் தடையும் இல்லை. பணியிட மாற்றங்கள், பதவி உயர்வுகள் ஆகியவற்றை இப்போதைய நடைமுறை விதிகளின் அடிப்படையில் மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.