திருவள்ளூர்

மக்கள் மீது சிறிதளவு கூட தி.மு.க.வினருக்கு அக்கறையில்லை – சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ பேட்டி

திருவள்ளூர்

மக்கள் மீது சிறிதளவு கூட தி.மு.க.வினருக்கு அக்கறையில்லை என்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நிவாரணமாக கழகத்தின் சார்பில் ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட 18 ஊராட்சிகளுக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் ஏற்பாட்டில் அப்பகுதியில் உள்ள பழவேற்காடு லைட் ஹவுஸ், குப்பம் தாங்கள், பெரும் புலம், கோட்டகுப்பம், கடப்பாக்கம், தத்தம் மஞ்சி, காட்டூர், திருவெள்ளைவாயல், வாயலூர், ரெட்டிபாளையம், கடப்பாக்கம், மெரட்டூர் ,கணியம்பக்கம், தேவதானம், அனுப்பம்பட்டு, நாலூர் என 18 ஊராட்சிகளில் ரூ.55 லட்சம் மதிப்பில் 35 ஆயிரம் ஏழை எளிய நடுத்தர குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி பருப்பு எண்ணெய், காய்கறி முகக் கவசங்கள் கிருமிநாசினி அடங்கிய தொகுப்புகள் வழங்கினார்.

18 ஊராட்சிகளில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் தலா 10 கிலோ அரிசி, எண்ணெய், மளிகை பொருட்கள், காய்கறி தலா 1000 ரூபாய் உள்ளிட்ட அத்தியாவசிய தொகுப்பினை திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும். பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.ராகேஷ் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதல்வர் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கழகத்தின் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த வேளையில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் வாழும் மக்களை நேரடியாக சந்தித்து உணவிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறோம். இந்த கொரோனா வைரஸ் கிருமி மக்களை இம்மி அளவிலும் நெருங்க விட கூடாது என்பதில் தமிழக அரசும், கழகமும் விழிப்புடன் செயல்படுகிறது.

இந்த நேரத்தில் மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதால் நாங்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று காய்கறிகள் மற்றும் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி வருகிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொஞ்சம் கூட மக்கள் மீது அக்கறை இல்லாமல் மக்களைச் சென்று பார்ப்பதில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. ஆனால் இந்த கொரோனா வைரஸை நமது மாநிலத்தில் பரவ விடாமல் தடுத்து மக்களை காக்க அரசுக்கு எதிர்க்கட்சிகள் கரம் கொடுத்து உதவாமல் அரசை குறை கூறி வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் மோகன வடிவேல், மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ். ராகேஷ், 15-வது வட்ட கழக செயலாளர் காமராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மெரட்டூர் திருமுருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தேவதானம் நாகராஜன், நாலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், வாயலுர் ராஜேஷ், மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.