ஈரோடு

1 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பு – கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்

ஈரோடு

ஈரோடு மேற்கு தொகுதியில் 1 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்புகளை மாநகர் மாவட்ட கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாநகர் மாவட்டக் கழகம் சார்பாக ஈரோடு மேற்கு தொகுதியில் 1 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்புகளை மாவட்டக் கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக காசிபாளையம் பகுதியில் 37-வது வார்டில் 2000 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி தொகுப்பினை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் தீவிர நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. ஈரோடு மாநகர் மாவட்டக் கழகம் சார்பாக மேற்கு தொகுதிக்குட்பட்ட ஈரோடு ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளிலும், சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட 6 ஊராட்சிகளிலும், நசியனூர், சித்தோடு பேரூராட்சிகளில் வசிக்கும் 35,000 குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 27 வார்டுகளிலும் 60,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. தூய்மை பணியாளர்களுக்கு 1500 பேருக்கு பேண்ட், சர்ட், சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 11 அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு வழங்கப்பட்டது. தூய்மை பணியாளர்கள், அம்மா உணவக பணியாளர்கள், சுகாதாரத்துறை, காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு 1 லட்சம் முட்டைகள் வழங்கப்பட்டது. முக கவசம், பாதுகாப்பு உபகரணங்கள் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் காசிபாளையம் பகுதி செயலாளர் கே.பி.கோவிந்தராஜன், சூரம்பட்டி ஆர்.ஜெகதீசன், ஆவின் துணைத்தலைவர் ஈரோடு குணசேகரன், ஈஸ்வரமூர்த்தி, கேபிள் ரமேஷ், டி.ராஜேந்திரன், டாஸ்மாக் கிருஷ்ணன்,மணி (எ) பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.