திருவண்ணாமலை

செய்யாறில் 300 பேருக்கு நிவாரண பொருட்கள் – தூசி கே.மோகன் எம்.எல்.ஏ வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் 300 பேருக்கு நிவாரண பொருட்களை தூசி கே.மோகன் எம்எல்ஏ வழங்கினார்.

கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள பொற்கொல்லர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், நலிந்தவர்கள் உள்ளிட்ட 300 பேருக்கு தலா 10 கிலோ அரிசி. காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் அரசு மளிகைபொருட்கள், விலையில்லா அரிசி, குடும்ப அட்டைகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்கியது.

மேலும் தொகுதி முழுவதும் உள்ள இருளர்கள், தூய்மை பணியாளர்கள், சலவைத்தொழிலாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள், பொற்கொல்லர்கள், புகைப்பட கலைஞர்கள், முடிதிருத்துவோர், ஆட்டோ ஓட்டுநர்கள். கார், வேன் ஓட்டுநர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் பேருக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது, மேலும் கழகத்தினர் 990 பேருக்கும தலா 25 கிலோ அரிசி சிப்பம், மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் கழக இலக்கிய அணி மாவட்ட செயலாளர் எம்.மகேந்திரன், நகர செயலாளர் ஜனார்த்தனம், நகர அம்மா பேரவை செயலாளர் வெங்கடேசன், அனக்காவூர் ஒன்றிய மாணவரணி செயலாளர் சி.துரை, மாவட்ட மாணவரணி செயலாளர் சுரேஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.