தற்போதைய செய்திகள்

ஜெயந்திபுரம் அணைக்கட்டு புனரமைக்கும் பணி – அமைச்சர் ேக.சி.வீரமணி துவக்கி வைத்தார்

வேலூர்

குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் சரஸ்வதி ஆற்றின் குறுக்ேக உள்ள ஜெயந்திபுரம் அணைக்கட்டை புனரமைக்கும் பணியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ேக.சி.வீரமணி துவக்கி வைத்தார்.

‘ெபாதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், குட்டை நீர்வரத்து கால்வாய்கள் ஆகியவற்றை தூர்வாரி சீரமைத்து பருவகாலத்தில் கிடைக்க ெபறும் மழைநீரை ேசமித்து விவசாயம் மற்றும் குடிநீர் ேதவைகளை பூர்த்தி ெசய்திடும் வகையில் குடிமராமத்து திட்டத்தை முதலமைச்சர் ெசயல்படுத்தி வருகிறார்.

அதனடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ெபாதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் ெமாத்தம் 49 ஏரிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் முன்ேனாடி திட்டமான குடிமராமத்து திட்டத்தின் கீழ் இதுவரை 2016 -17-ம் நிதியாண்டில் 9 பணிகளும், 2018-2019-ம் ஆண்டில் – 9 பணிகளும் 2019-20ம் நிதியாண்டில் 6 பணிகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் மூன்று கட்டங்களாக ரூ.5.12 ேகாடி மதிப்பீட்டில் 24 ஏரிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் 1653.03 ஹெக்ேடர் விளைநிலங்களுக்கு பாசனவசதி ெபற வழிவகை ெசய்யப்பட்டுள்ளது.

தற்ேபாது நான்காம் கட்டமாக 2020-2021-ம் நிதியாண்டில் ரூ.149 ேகாடி மதிப்பீட்டில் 2 ஏரிகள், ஒரு அணைக்கட்டு மற்றும் ஆண்டியப்பனூர் ஓடை நீர்தேக்க பிரதான கால்வாய் சீரமைக்கும் பணி என நான்கு பணிகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் அந்தந்த ஏரிகள், அணைக்கட்டு மற்றும் கால்வாயின் ஆயக்கட்டுதாரர் விவசாய சங்கங்களின் மூலம் பணி ேமற்ெகாள்ளப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 2 ஏரிகளில் 2.81 கி.மீ ஏரிக்கரைகளை பலப்படுத்தவும் 23.35 கி.மீ கால்வாய்களை தூர்வாரவும், 5 மதகுகள் பழுது பார்க்கவும், 4 கலிங்குகள் பழுது பார்க்கவும் மற்றும் ஆண்டியப்பனூர் ஓடை நீர்தேக்க பிரதான கால்வாயில் 3.63 கி.மீ தூர்வாரவும் வழிவகை ெசய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 274.36 ஹெக்ேடர் விவசாய விளைநிலங்கள் பாசனவசதி ெபற வழிவகை ெசய்யப்படவுள்ளது.

இதில் திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், ஜெயந்திபுரம் அணைக்கட்டு ரூ.25.00 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிக்கான பூமிபூஜை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ேக.சி.வீரமணி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ப.சிவன்அருள் தலைமை தாங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம் தமிழ்நாடு – ஆந்திர மாநில எல்லையான ெகாத்தூர் வனப்பகுதியில் உற்பத்தியாகும் சரஸ்வதி ஆறு சிறு ஓடைகளை இணைத்துக் ெகாண்டு பச்சூர், நாட்றம்பள்ளி, ஆத்தூர்குப்பம் வழியாக ெசன்று ேகதாண்டப்பட்டி அருகே கல்லாற்றுடன் இணைந்து 34 கி.மீ ெதாலைவில் வாணியம்பாடி அருகே பாலாற்றில் கலக்கிறது.

ஜெயந்திபுரம் அணைக்கட்டானது நாட்றம்பள்ளி வட்டம், தமிழக ஆந்திர எல்லையிலிருந்து சுமார் 11 கி.மீ ெதாலைவில் பந்தாரப்பள்ளி கிராமத்தில் ஜெயந்திபுரம் அருகே சரஸ்வதி ஆற்றின் குறுக்ேக அக்ரகாரம் ஏரிக்கு தண்ணீர் ெகாண்டு ெசல்ல கட்டப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் சரஸ்வதி ஆற்றில் வரும் நீரினை தடுத்து வலதுபுறம் உள்ள கால்வாய் மூலம் அக்ரகாரம் ஏரிக்கு ெகாண்டு ெசல்லப்படுகிறது. அக்ரகாரம் ஏரி ெபாதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் முறைப்படுத்தப்படாத ஏரியாகும்.

இந்த ஏரிக்கரையின் நீளம் 823 மீ ஆகும். இவ் ஏரியில் இரண்டு உபரி நீர் ேபாக்கியும் மூன்று மதகுகளும் உள்ளது. இதன் மூலம் 103.14 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி ெபறுகின்றது. மேலும் இந்த ஏரி சரஸ்வதி ஆற்றின் குறுக்ேக கட்டப்பட்டுள்ள ெஜயந்திபுரம் அணைக்கட்டின் வலதுபுறக் கால்வாய் வாயிலாக நீர்வரத்து ெபறுகிறது. இக்கால்வாயின் நீளம் 5.00 கி.மீ மற்றும் அகலம் 3.00 மீ ஆகும். இதன் மூலம் 103.14 ஏக்கர் நிலம் நேரடி பாசனமும் 17.3 ஏக்கர் நிலம் மறைமுக பாசனவசதியும் ெபறுகிறது.

ஜெயந்திபுரம் அணைக்கட்டின் மதகு பகுதி உடைப்பு ஏற்பட்டு மழைக்காலங்களில் நீர் கால்வாய் வழியாக ஏரிக்கு ெசல்லாமல் ஆற்றில் ெசல்கிறது. ேமலும் இடதுபுற கரை தாழ்ந்து பலவீனமாக உள்ளதால் இடதுபுற கரை உடைப்பு ஏற்பட்டு மழைநீர் அருகாமையில் உள்ள விளைநிலங்களில் ெவளியேறுகிறது. ேமலும் அணைக்கட்டின் ேமற்புறம் மண் தூர்ந்து ேமடிட்டுள்ளதால் நீர் ெகாள்ளளவு குறைந்தும் கால்வாய் குறுகியுள்ளதால் தண்ணீர் ஏரிக்கு ெகாண்டு ெசல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே இதனை சரிசெய்யும் விதமாக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் ஜெயந்திபுரம் அணைக்கட்டு புனரமைக்கப்படவுள்ளது.

இம்மதிப்பீட்டில் அணைக்கட்டு பகுதியில் இடதுபுற கரையை பலப்படுத்த கான்கிரீட் சுவர் அமைப்பது, கான்கிரீட் ஏப்ரான் அமைப்பது, அணைக்கட்டின் வலதுபுறம் உள்ள கால்வாய் தலைப்புபகுதியை அகலப்படுத்தி தூர்வாருவது, கால்வாயின் இருபுறமும் கான்கிரீட் சுவர் அமைப்பது, அணைக்கட்டின் ேமற்புறம் உள்ள ஆற்றை 2.8 கி.மீ சுத்தம் ெசய்து தூர்வாரி எல்லைக்கற்கள் நடுவது ஆகிய பணிகள் ேமற்ெகாள்ள வழி ெசய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மழைக்காலங்களில் ஆற்றில் வரும் நீரினை இந்த அணைக்கட்டின் மூலம் தடுத்து கால்வாய் வழியாக அக்ரகாரம் ஏரிக்கு ெகாண்டு ெசல்லப்படும். தென்மூலம் 120.44 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி ெபற்று 176 விவசாயக் குடும்பங்கள் பயன் ெபறுவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.விஜயகுமார், ெபாதுப்பணித்துறை நீர் வள ஆதாரம் கண்காணிப்பு ெபாறியாளர் சுரேஷ், ெசயற்ெபாறியாளர் சண்முகம், உதவி ேகாட்ட ெபாறியாளர் விஸ்வநாதன், உதவி ெபாறியாளர் குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், முன்னாள் ஒன்றிய தலைவர் ஆர்.ரமேஷ் மற்றும் நீர் பாசன ஆயக்கட்டுதாரர் விவசாயிகள் கலந்து கொண்டனர்.