தமிழகம்

மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து

சென்னை

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் நியமிக்கப்பட்டுள்ளதற்காக அவருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக உயரிய பொறுப்பில் நமது இந்திய திருநாட்டிலிருந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. டாக்டர் ஹர்ஷ்வர்தனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.