தற்போதைய செய்திகள்

அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து மக்களின் அரசாக கழக அரசு செயல்படுகிறது – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பாராட்டு

திருவண்ணாமலை

மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து மக்களின் அரசாக கழக அரசு செயல்படுகிறது என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கழக அரசின் 5ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஆரணியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள புரட்சித்தலைவர் சிலை, புரட்சித்தலைவி அம்மாவின் சிலை, ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

பின்னர் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசுகையில், அம்மா அவர்களின் வழியில் கழக அரசு 4ம்ஆண்டு முடிந்து 5வது ஆண்டின் துவக்க விழாவினை காண்கிறது. மேலும் தொடர்ந்து கழக அரசு 9 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வருகிறது. தமிழக மக்களின் மீது அக்கறை கொண்டு தொடர்ந்து செயல்படும் அரசாக கழக அரசு உள்ளது. மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து மக்களின் அரசாக கழக அரசு செயல்படுகிறது. காவிரி பிரச்னை முதல், கொரோனா வைரஸ் பிரச்னை வரை மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் அரசாக செயல்படுகிறது. தொடர்ந்து பொதுமக்கள் கழக அரசுக்கு ஆதரவு தரவேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் க.சங்கர், மாவட்ட பால் கூட்டுறவு சங்கத் துணைத்தலைவர் பாரி பி.பாபு, நகர செயலாளர் எ.அசோக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் டி.கருணாகரன். ஒன்றிய செயலாளர்கள் பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் அ.கோவிந்தராஜன், கௌரி ராதாகிருஷ்ணன், பூங்கொடி திருமால், முன்னாள் தலைவர்கள் வெங்கடேசன், பெருமாள், பட்டு கூட்டுறவு சங்கத்தலைவர்கள் சேவூர் ஜெ.சம்பத், பாலசந்தர், மாணவரணி குமரன், பையூர் சதீஷ், 3-வது வார்டு பாரதி, காந்தி நகர் விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.