தற்போதைய செய்திகள்

இரவுநேரங்களில் சட்ட விரோதமாக செயல்படும் சாய தொழிற்சாலைகளை கண்காணித்து நடவடிக்கை – அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்

ஈரோடு:-

இரவுநேரங்களில் சட்ட விரோதமாக செயல்படும் சாய தொழிற்சாலைகள் குறித்து அதிகாரிகள் குழு கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பாக பணியாற்றி வருகிறார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்பும் அளவிற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கிராமப்புற பகுதியில் பலருக்கும் வங்கி கணக்கு இல்லாததால் தான் பொதுமக்களுக்கு நேரடியாக ரேஷன் கடைகளில் நிவாரணம் வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகளில் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டதால் குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. பவானி தொகுதியில் அம்மாபேட்டை, பவானி ஒன்றிய பகுதிகளில் ரூ.5 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாய தொழிற்சாலைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சட்ட விரோதமாக செயல்படும் சாய தொழிற்சாலைகள் குறித்து அதிகாரிகள் குழு கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நெய்வேலியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி வழங்கும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சிவகாமி சரவணன், பவானி வரதராஜன், கவுந்தப்பாடி ஊராட்சி தலைவர் பாவாதங்கமணி, துணைத்தலைவர் தீபிகா, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கே.சி.கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைத்தலைவர் அய்யம்பாளையம் சரவணன், கவுந்தப்பாடி சிவக்குமார் உள்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.