தற்போதைய செய்திகள்

ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேம்பட நலத்திட்டங்களை தாயுள்ளத்தோடு முதலமைச்சர் வழங்கி வருகிறார் – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பெருமிதம்

திருப்பூர்

ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேம்பட தாயுள்ளம் கொண்ட முதலமைச்சர் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார் என்று பொள்ளாச்சி வி.ஜெயராமன் பெருமிதத்துடன் கூறினார்.

ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகரத்திற்குட்பட்ட பாரதியார் ஸ்கூல் எம்.ஜி.ஆர். காடு பாண்டியன் டி. கடை தெபேரே ஸ்கூல் ராஜேந்திரன் வீடு கே.வி.ஆர்.மில் மிணீஸ் லாட்ஜ் பெருமாள் கோவில் சத்திரம் வீதி ராஜீவ்நகர் காலனி கணபதி நகர் கோவில் களிமேடு பேங்க் செந்தில் வீடு அண்ணா நகர் களிமேடு சர்ச் அமராவதி நகர் செம்மங்காளிபாளையம் பங்களாப்புதூர் லட்சுமி நகர் ஆகிய வார்டு பகுதிகளில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வசிக்கும் 12 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு ஒன்றிய கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் ஏற்பாட்டில் அரிசி, எண்ணெய், தேங்காய், பால், தயிர், முக கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்.

பின்னர் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தொற்று தமிழகத்தில் பரவாமல் தடுக்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு, ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் பல்வேறு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட தாயுள்ளம் கொண்ட முதலமைச்சர் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்.

அதனடிப்படையில், நியாயவிலைக் கடைகளில் ஏப்ரல், மே மாதத்திற்கான உணவுப்பொருட்கள் விலையில்லாமல் வழங்கி அத்துடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது. மேலும் கட்டுமான தொழிலாளர்கள், முடிதிருத்துவோர், கோவில் பூசாரிகள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் அல்லாத நபர்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மின் கட்டனம் செலுத்துவதற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கி கடன் தவணைகளை செலுத்த 3 மாதம் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாப்பாக தங்க வைத்து, அவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்குதல் மற்றும் விருப்பமுள்ளவர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருளாதாரம் மேம்பட கூட்டுறவுத்துறையின் சார்பாக சிறப்புக் கடனுதவி வழங்கும் திட்டம் மாவட்ட வாரியாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அம்மா அவர்கள் பெண்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதற்காக எண்ணற்ற திட்டங்களை பெண்களை மையப்படுத்தியே செயல்படுத்தினார். அம்மா அவர்களின் வழியில் செயல்படும் முதலமைச்சர், இந்த ஊரடங்கு காலத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பெண்களின் வருவாயை அதிகரிப்பதன் மூலம் ஒரு குடும்பத்தின் பொருளாதாரம் மேம்படும் என்ற உன்னத நோக்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற பல நலத்திட்டங்கள் தொடர்ந்திட நீங்கள் என்று கழக அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறினார்.