தற்போதைய செய்திகள்

ஊழல் கட்சி என்றால் திமுக என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும் – ஸ்டாலினுக்கு, அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பதிலடி

மதுரை

ஊழல் கட்சி என்றால் தி.மு.க. என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும் என்று ஸ்டாலினுக்கு, அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை வில்லாபுரத்தில் மதுரை மாநகர் மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா தலைமையில் 1000க்கும் மேற்பட்ட முஸ்லிம் இன மக்களுக்கு அரிசி, காய்கறி, சமையல் தொகுப்பு உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிவாரண பொருட்களை மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்ருமான செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த கொரோனா நோயால் உலகிலுள்ள 200 நாடுகள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. ஆனால் நோயின் தாக்கத்திலிருந்து தமிழகத்தை காக்க நமது முதலமைச்சர் இரவு, பகல் பாராது மக்கள் சேவையாற்றி இந்த நோய் தாக்கத்திலிருந்து தமிழக மக்களை காப்பாற்றி உள்ளார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார் ஒட்டுமொத்த தமிழக மக்களும் அம்மாவின் அரசை பாராட்டி வரும் வேளையில் அம்மாவின் அரசுக்கு எப்படியாவது களங்கம் சுமத்த ஸ்டாலின் பொய் பிரச்சாரத்தைை அரங்கேற்றி வருகிறார்.

இன்றைய கூட தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தி.மு.க.வினர் கொச்சைப்படுத்தி பேசி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களும் திமுகவின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இதனை திசைதிருப்பும் வகையில் ஸ்டாலின் நேர்மையாக நடைபெறும் அம்மாவின் அரசில் ஊழல் நடைபெறுகிறது என்று கூறுகிறார். நாங்கள் அம்மாவின் பிள்ளைகள். தவறு செய்ய மாட்டோம். ஆனால் திமுக அப்படியல்ல. ஊழல் கட்சி என்றால் திமுக என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும்

வீராணம் திட்டம் ஊழல், நிலக்கரி ஊழல், நில அபகரிப்பு, 2ஜி அலைக்கற்றை ஊழல் இப்படி பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்தது தான் திமுக. ஏன் இந்தியாவிலேயே ஊழலுக்காக ஆட்சியை கலைக்கப்பட்ட கட்சி என்றால் அது திமுக தான். இது அனைவருக்கும் நன்றாக தெரியும். ஆகவே ஊழலைப்பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது. இது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் யுத்தம் ஆகும். அதர்மம் ஜெயிப்பது போல் தெரியும். ஆனால் இறுதி வெல்வது தர்மம் தான். ஆகவே இறுதியில் வெல்லப்போவது நாங்கள் தான்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் எம் எஸ் பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் வில்லாபுரம் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்