சேலம் தற்போதைய செய்திகள்

1500 ஆட்டோ தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய தொகுப்பு – ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. வழங்கினார்

சேலம்

சேலம் மாநகர் தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில்  சீலநாயக்கன்பட்டி பகுதியில் 1500 ஆட்டோ தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு தொகுப்பை மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ வழங்கினார்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின் பேரில், மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ, தகவல் தொழில் நுட்ப பிரிவு சேலம் மண்டல செயலாளர் வி.வி ஆர்.ராஜ்சத்யன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில்,சேலம் மாநகர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கே.கனகராஜ் ஏற்பாட்டின் பேரில் சேலம் 47-வது கோட்டம் நலிந்த கழக நிர்வாகிகள் மற்றும் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்கள் 1500 பேருக்கு 5 கிலோ அரிசி மற்றும் பருப்பு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ கலந்து கொண்டு ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் நலிந்த கழக நிர்வாகிகளுக்கு தலா 5 கிலோ அரிசி, பருப்பு ஆகியவற்றை மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.சக்திவேல், முன்னாள் மாநகர செயலாளர் எம்.கே.செல்வராஜ், மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாஜலம், பகுதி செயலாளர்கள் கே.பி.பாண்டியன், சண்முகம், ஜெகதீஸ்குமார், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் நெத்திமேடு முத்து, அம்மா பேரவை செயலாளர் சரவமணி, முன்னாள் மண்டல குழு தலைவர் மோகன், முன்னாள் அண்ணா தொழிற்சங்க செயலாளர் பால்கிருஷ்ணன், கொண்டலாம்பட்டி பகுதி பேரவை செயலாளர் செந்தில்குமார், எம்ஜி.ஆர். இளைஞரணி ஜானகிராமன், அ.ஜவஹர், யாதவ பிரபு, கலை.ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.