சென்னை

1500 குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் நிவாரணம் – மாவட்ட செயலாளர் வி.என்.ரவி எம்.எல்.ஏ வழங்கினார்

சென்னை

விருகம்பாக்கம் தொகுதியில் 1500க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி வழங்கினார்

தென்சென்னை தெற்கு மாவட்டம் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறுவதற்காக தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு மாநகராட்சி மற்றும் சுகாதார துறையை சேர்ந்த ஊழியர்களையும் முழு அர்ப்பணிப்புடன் பணிசெய்ய அறிவுறுத்தி வருகிறார். மேலும் ஏழை குடும்பங்களுக்கு ஒவ்வொரு நாளும் தவறாமல் எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 138-வது வார்டில் எம்.ஜி.ஆர்.நகர், மாநகராட்சி மேல்நிலைபள்ளியில் எம்.ஜி.ஆர்.நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 1500க்கும் மேற்பட்ட ஏழை மக்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் அனைவருக்கும் அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, கோதுமை மாவு, உப்பு, கடுகு, சீரகம், மீளகாய் பொடி, ரவை, பிஸ்கட் பாக்கெட் 5-வகையான காய்கறிகள் ஆகியவை அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது ஏ.எம்.காமராஜ், வட்ட செயலாளர் எம்.பாஸ்கர், முபா.ரமேஷ், நித்தியா, ராக்கி, ஜெகன், மகா.பழநிசாமி, சிவா, வைகுண்டராஜன், அண்ணாமலை, இ.சங்கர், பில்டர்.மோகன், எஸ்.சுரேஷ், டி.சி.அசோக்குமார், முரளி, சீனிவாசன், தியாகராஜன், எம்.ஜி.ஆர்.நகர் முரளி, முத்து மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.