கன்னியாகுமரி

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் 1065 பேருக்கு நிவாரண உதவிகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்

கன்னியாகுமரி:-

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில், பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், கலந்து கொண்டு, 1,065 நபர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம், ஆரல்வாய்மொழி பேரூராட்சி கழகம் சார்பில், 100 ஏழை மக்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரணமாக, காய்கறிகள், மசாலா பொருட்கள் மற்றும் இனிப்புகளை, மீனாட்சிபுரம், லூத்தரன் தொடக்கப்பள்ளி அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து குமரி மாவட்ட அம்மா பேரவை (கிழக்கு) சார்பில், தேரூர் பேரூராட்சிக்குட்பட்ட புதுகிராமத்தில், 75 ஏழை மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் குலசேகரபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள, 300 ஏழை மக்களுக்கு, பல்பநாபன்புதூர் தலா 5 கிலோ அரிசி, மையிலாடி பேரூராட்சிக்குட்பட்ட மார்த்தாண்டபுரத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியிலுள்ள 100 குடும்பங்களுக்கு, தலா 5 கிலோ அரிசி, மசாலா பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களையும் அவர் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து ஆற்றூர் ஒயிட் நினைவு மருத்துவகல்லூரி, மருத்துவமனை நிர்வாகம் சார்பாக, பொதுமக்களுக்கு ஆர்சனிக் மாத்திரைகளை, அஞ்சுகிராமம் பேருந்து நிலையம் அருகில் வழங்கினார். மேலும், புத்தளம் பேரூர் கழகம் சார்பாக, புத்தளம் பேரூராட்சிக்குட்பட்ட பணிக்கன் குடியிருப்பு பகுதியினை சார்ந்த, 250 ஏழை மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி, தெங்கம்புதூர் பகுதியினை சார்ந்த, 60 ஏழை மக்களுக்கும், தலா 5 கிலோ அரிசி, 1 பாக்கெட் கோதுமை மாவு, பெத்தபெருமாள் குடியிருப்பு பகுதியினை சார்ந்த, 100 பேருக்கு, 5 கிலோ அரிசி, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில், 7-வது வார்டு கழகம் சார்பாக, 6-ம் கட்டமாக 80 பேருக்கு, தலா 5 கிலோ அரிசி ஆகியவற்றை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்.