தற்போதைய செய்திகள்

5000 ஏழை குடும்பங்களுக்கு நிவாரணம் – அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

வேலூர்:-

நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு வீடாக சென்று 5000 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை தனது சொந்த செலவில் வழங்கினார்.

வேலூர் மேற்கு மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றிய, பேரூராட்சி பகுதிகளில் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேலூர் மேற்கு மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் புலவர் ச.இரமேஷ், நாட்றம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் எம்.கே.ராஜா, பேரூராட்சி கழக செயலாளர் ஞானசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டு 5000 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் அனைத்து ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் நிவாரண பொருட்களை எடுத்து சென்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ கொண்ட அரிசி தொகுப்பினை வழங்கினார். அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரண பொருட்களை பெற்று சென்றனர்.

நிவாரண பொருட்களை பெற்றுச்சென்ற ஏழை மக்கள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர்
ஓ.பன்னீர்செல்வத்துக்கும், நிவாரண உதவிகள் வழங்கிய அமைச்சர் கே.சி.வீரமணிக்கும், தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், ஜோலார்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் ஆர்.ரமேஷ், டைகர் இளங்கோ, போலீஸ் பெருமாள், மை.பிரகாசம், பொதுக்குழு உறுப்பினர் மகான் மற்றும் கழக நிர்வாகிகள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.