திருநெல்வேலி

ராதாபுரம் தொகுதி மக்களுக்கு அரிசி பைகள் – இன்பதுரை எம்.எல்.ஏ வழங்கினார்

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி ஆதிதிராவிடர் குடியிருப்பு மக்களுக்கு விலையில்லா அரிசி பைகளை இன்பதுரை எம்.எல்.ஏ வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி பொதுமக்களுக்கு அந்தந்த பகுதியிலுள்ள கழகத்தின் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராதாபுரம் தொகுதி முழுவதும் இன்பதுரை எம்.எல்.ஏ தலைமையில் தீயணைப்புத்துறையினர் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்கு இன்பதுரை எம்.எல்.ஏ முக கவசங்களை வழங்கினார்.

மேலும் கொரோனா தடுப்பு நிவாரணமாக ராதாபுரம் தொகுதி முழுவதும் முதற்கட்டமாக தூய்மைப்பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை அரிசி பைகளை வழங்கினார். இதையடுத்து ராமன்குடி,கருங்குளம் விஜயாபதி, நவ்வலடி, கோட்டைகருங்குளம், இடிந்தகரை, வல்லவன்விளை, குறிஞ்சிகுளம், வடிவம்மன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வீடுவீடாக சென்று இன்பதுரை எம்.எல்.ஏ பொதுமக்களுக்கு அரிசி பைகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து ராதாபுரம் தொகுதியிலுள்ள உள்ள அனைத்து ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கும் இன்பதுரை எம்.எல்.ஏ நேரில் சென்று அரிசி பைகளை வழங்கி வருகிறார். நேற்றுமுன்தினம் ராதாபுரத்தையொட்டிய கொத்தன்குளம், அரசர்குளம் மற்றும் வள்ளியூரை அடுத்த அம்மச்சிகோவில், மாறன்குளம் ஆகிய ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று ஒவ்வொரு வீட்டிற்கும் அரிசி பைகளை நேரடியாக வழங்கினார்.

ராதாபுரம் ஒன்றியம் பொன்னாத்தி, ஆமையடி, பெருங்கன்னங்குளம், குட்டி நயினார்குளம் பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்ற இன்பதுரை எம்.எல்.ஏ ஒவ்வொரு வீடு,வீடாக சென்று பொதுமக்களுக்கு இலவச அரிசி பைகள் வழங்கினார்.

வள்ளியூர் ஒன்றியத்திலுள்ள மேல கிளாக்குளம், கீழ கிளாக்குளம், சூழ்ச்சிகுளம், அடங்கார்குளம், ஊரல்வாய்மொழி காலனி போன்ற ஆதிதிராவிடர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளுக்கு சென்ற இன்பதுரை எம்.எல்.ஏ அங்குள்ள அனைவருக்கும் அரிசி பைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர்கள் வள்ளியூர் அழகானந்தம், ராதாபுரம் அந்தோணி அமலராஜா, ராதாபுரம் முருகேசன், அடங்கார்குளம் செல்வன், மேலகிளாக்குளம் தங்கவேல் பெருங்கன்னங்குளம், நயினார், கோட்டை கபாலி, ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.