கடலூர்

சிதம்பரத்தில் 75 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ வழங்கினார்

கடலூர்

சிதம்பரம் தொகுதியில் 75 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் வழங்கினார்.

கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட சிதம்பரம் நகராட்சி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், குமராட்சி ஊராட்சி ஒன்றியம். புவனகிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகள் பரங்கிபேட்டை, கிள்ளை, அண்ணாமலைநகர் ஆகிய பகுதிகளை சார்ந்த 75 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரம் நகரத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பு.தா.இளங்கோவன், மாவட்ட கழக அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் க.திருமாறன், குமராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்குழலி பாண்டியன், பரங்கிப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் ச.கருணாநிதி, புவனகிரி ஒன்றிய செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான சி.என். சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிதம்பரம் நகர கழக செயலாளர் ஆர்.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தலைமையேற்று 75 ஆயிரம் குடும்பங்களை சார்ந்த பயனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர கழக செயலாளர் தோப்பு கே.சுந்தர், மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், தலைமை கழக பேச்சாளர் தில்லை கோபி, ஆவின் தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் ஆவின் தலைவர் சுரேஷ்பாபு, குமராட்சி ஒன்றிய அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் செல்வகணபதி, ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வி, அமுதா, பரங்கிபேட்டை ஒன்றிய செயலாளர் அசோகன், ஒன்றிய அவைத்தலைவர் கோ.வி.ராசாங்கம், பேரூராட்சி செயலாளர் மாரிமுத்து அம்மா பேரவை சந்தர் ராமஜெயம், மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் வீராசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் முருகையன், கிள்ளை பேரூராட்சி செயலாளர் விஜயன், அண்ணாமலை பேரூராட்சி செயலாளர் ஆறுமுகம், இளைஞரணி செயலாளர் கருப்பு ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.