தற்போதைய செய்திகள்

ஆரணியில் புகைப்பட கலைஞர்கள் 250 பேருக்கு நிவாரணம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள புகைப்பட கலைஞர்கள் 250 பேருக்கு நிவாரண உதவியை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள புகைப்பட கலைஞர்கள் 250 பேரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தனது சொந்த செலவில் தலா 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவராணப் பொருட்களை வழங்கினார்.

ஆரணி, திருமணி, பெரணமல்லூர், சேத்பட், பெரியகொழப்பலூர், ஆரணி சைதாப்பேட்டை, களம்பூர், சேவூர், குண்ணத்தூர், வடுகசாத்து, எஸ்.வி.நகரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் நிவாரணப் பொருட்களை பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் க.சங்கர், மாவட்ட பால் கூட்டுறவு சங்கத் துணைத்தலைவர் பாரி பி.பாபு, நகர செயலாளார் எ.அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் அ.கோவிந்தராஜன், பூங்கொடி திருமால், பட்டுகூட்டுறவு சங்கத்தலைவர் சேவூர் ஜெ.சம்பத், மாணவரணி குமரன், பையூர் சதீஷ், 3-வது வார்டு பாரதி, காந்திநகர் வினாயகம், புகைப்பட கலைஞர்கள் சார்பில் ரவிராஜ முனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.