காஞ்சிபுரம்

மேற்கு பகுதிக் கழகச் செயலாளர் ஏற்பாட்டில் சோழிங்கநல்லூரில் 20 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு பகுதிக் கழகச் செயலாளருமான கே.பி.கந்தன் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி, காய்கறி, பிரட் உட்பட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம் மற்றும் சோழிங்கநல்லூரில் உள்ள 22 அம்மா உணவகங்களுக்கு இலவசமாக உணவு வழங்க ரூபாய் 21,66,114 நிதி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து 184வது வட்டத்தில் உள்ள கல்லுக்குட்டை, பிள்ளையார் கோவில், கோவிந்தசாமி நகர், சந்தியப்பன் சாலை, வடக்கு கே.பி.கே. நகர், சி.பி.ஐ. காலனி, திருவள்ளுவர் தெரு, நேதாஜி நகர் உட்பட பல்வேறு இடங்களில் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதிக் கழகச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.கந்தன் சுமார் 20 ஆயிரம் பேருக்கும் கொரோனா நிவாரண உதவியாக அரிசி காய்கறி, பிரட், உட்பட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். நிவாரண உதவிகளை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் கழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் வி.குமார், எம்.வெங்கடேசன், ஜி.எம்.ஜானகிராமன், ஏ.கிருஷ்ணமூர்த்தி, வி.அமுதா வெங்கடேசன், பி.ரஞ்சித்குமார், கே.குமார், கே.கோமளா, பி.ஆனந்தி, எம்.சேகர், பி.அருள்மணி, இ.சுரேஷ், தயாளன், வெல்டிங் சேகர், எஸ்.சுரேஷ், எல்.செந்தில்குமார், பி.சிவராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்கு பகுதி கழகச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.கந்தன், 184-வது வட்டக் கழக செயலாளர் எம்.வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர்.