சேலம்

சேலம் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.25 கோடி சிறப்பு கடன் உதவி வழங்க இலக்கு – இளங்கோவன் தகவல்

சேலம்

சேலம் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கொரோனா சிறப்பு கடன் உதவியாக ரூ.25 கோடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 144 உத்தரவு அமல்படுத்தப்பட்டு நோயிலிருந்து தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைப்படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் முறையாக கடன் பெற்று தவணை தவறாமல் செலுத்திய மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பு கடன் உதவி வழங்கலாம் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

சேலம் மாவட்டம் ஆத்தூர் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுய உதவிக் குழுக்களுக்கு கொரோனா சிறப்பு கடன் உதவியாக 121 குழுக்களுக்கு 1511 நபர்கள் பயன் பெறும் வகையில் ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டது.

இந்த கடன் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் காசோலையை வழங்கி அவர் பேசும்போது கூறியதாவது:-

முதலமைச்சர் உத்தரவின் பேரில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆலோசனையின் பேரில் சேலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முறையாக கடன்களை பெற்று தவணை தவறாமல் செலுத்திய மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கோரோனோ சிறப்பு கடன் உதவியாக போர்க்கால அடிப்படையில் கடனுதவி வழங்கப்படுகிறது அதன்படி சேலம் மாவட்டத்தில் ரூ.25 கோடி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 171 குழுக்களுக்கு 1511 பேர் பயன் பெறும் வகையில் ரூ. ஒரு கோடியே 14 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மகளிர் சுய உதவி குழுக்கள் பயன்பெற்றுள்ளனர்.

மேலும் கல்லாநத்தம் நடுவலூர் பகுதிகளில் கூட்டுறவு வங்கிகள் மூடப்பட்டிருந்த நிலையில் அந்த வங்கிகளை புதுப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட செயல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. விரைவில் மேலும் புதியதாக ஆத்தூர் தாரமங்கலம் பகுதிகளில் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் விவசாயிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இந்த சிறப்பு கடன் உதவித் திட்டத்தினை ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் எந்த நேரத்திலும் பயிர் கடன் நகை கடன் மற்றும் கறவை மாடு கடன் விவசாய இடுபொருள்கள் விவசாயிகளுக்கான இயந்திரங்கள் வாங்குவதற்கான கடன் ஆகிய அனைத்தும் உடனடியாக கூட்டுறவு வங்கிகள் சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மக்களின் பேராதரவோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி, கூட்டுறவு வங்கிகளின் கூடுதல் பதிவாளர், மேலாண்மை இயக்குனர் மிருணாளினி, சேலம் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் தமிழ்ச்செல்வன், வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் முத்து விஜயா மற்றும் வங்கியின் உயர்மட்ட அலுவலர்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்