திருப்பூர்

சத்தமில்லாமல் சரித்திரம் போற்றும் சாதனை மிகுந்த ஆட்சியை முதல்வர், துணை முதல்வர் நடத்தி வருகின்றனர் – பொள்ளாச்சி வி.ஜெயராமன் பெருமிதம்

திருப்பூர்

சத்தமில்லாமல் சரித்திரம் போற்றும் சாதனையை முதல்வர், துணை முதல்வர் நடத்தி வருகின்றனர் என்று சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பெருமிதத்துடன் கூறி உள்ளார்.

ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதி வெள்ளகோவில் ஒன்றியம் முத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட ஈஸ்வரன் கோவில் வீதி சுப்பிரமணிய புரம் மாதவராஜபுரம் செங்கோடம் பாளையம் வேலயுதம் பாளையம் மூலகவுண்டன் புதூர் மேட்டுகடை தொட்டியாம்பாளையம் கரட்டுபாளையம் ஊடையம் மலையுத்தாம் பாளையம் பெருமாள் புதூர் முத்தூர் ஆகிய கிராமப் பகுதிகளில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வசிக்கும் ஏழை எளிய 5 ஆயிரம் ஏழை எளிய குடும்பங்களுக்கு ஒன்றிய கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் ஏற்பாட்டில் அரிசி, எண்ணெய், தேங்காய், பால், தயிர், முக கவசம் கிருமிநாசினி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று, மக்களுக்காக தன் இறுதிமூச்சு வரை வாழ்ந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா, அவர்களின் தொடர் வெற்றியை பெற்று ஆட்சி அமைத்த வரலாற்று சிறப்புமிக்க பொன்னான நன்னாளில் நான்காண்டு நிறைவுற்று ஐந்தாம் ஆண்டு தொடங்குகிற நன்னாள் இந்நாள்.

மனிதப் புனிதர் புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்ட , இந்த மாபெரும் புனித இயக்கத்தை, இந்தியாவில் மூன்றாம் பெரிய இயக்கமான உருவாக்கி கழகத்திற்கு மாபெரும் அழியாப் புகழைப் பெற்றுத்தந்த புரட்சித்தலைவி அம்மா, வரலாற்று சிறப்புமிக்க சட்டப்பேரவையில் இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று தனது லட்சியத்தை முழக்கமிட்டார்.

அம்மாவின் தீர்க்கதரிசனத்துடன், முழக்கமிட்ட அந்த வார்த்தைகளை தங்களின் வேதவாக்காக எண்ணி, அம்மாவின் புத்தகத்தில் அடிபிறழாமல், உலக நாடுகளே பின்பற்றும் வகையில் ஒரு சத்தம் இல்லாமல் சரித்திரம் போற்றும் சாதனை மிகுந்த ஆட்சியை, தமிழகத்தில் இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், கழக இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எடப்பாடியார் சிறப்பாக நடத்தி வருகிறார். அவருக்கு உறுதுணையாக பாண்டிநாட்டு பண்பாளர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார் என்பதை எட்டரை கோடி மக்களும் நன்கு அறிந்து அம்மாவின் அரசை பாராட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரியை உருவாக்கியும், காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உருவாக்கியும், தமிழகத்தில் புதிய தொழில் புரட்சியை உருவாக்கி அதன் மூலம் 11 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வண்ணம் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்று 8,835 கோடி அளவில் தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்த்தும், தமிழகத்தில் அனைத்து குடும்பங்களும் தித்திக்கும் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் வகையில் 1000 ரூபாய் பொங்கல் பரிசுடன் பொங்கல் தொகுப்புகளையும் வழங்கியும், தமிழகத்தில் ஜீவாதார பிரச்சினையான முல்லைப் பெரியாறு,

காவேரி போன்ற வற்றை அம்மாவின் வழியில் மீட்டெடுத்தும், இந்தியாவிலேயே நல் ஆளுமை பெற்ற மாநிலமாக தமிழகத்தை முதலிடம் பெற வைத்து மத்திய அரசால் விருது பெற வைத்தும், 11,250 கோடியில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க நடந்தாய் வாழி காவிரி திட்டமும் இதுபோன்ற பல்வேறு பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை எல்லாம் இந்த நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றி மாபெரும் சகாப்தம் படைத்தது மட்டுமல்லாது உலக நாடுகளை அச்சுறுத்தும் இந்த கொரோனா வைரஸ் நோயிலிருந்து, மக்களைக் காக்க இரவு பகல் பாராது அயராது மக்கள் பணியாற்றி, இதன் மூலம் தமிழக மக்களை காத்து இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாய் தமிழகம் திகழ்கின்ற என்ற மத்திய அரசின் பாராட்டை பெற்று மட்டுமல்லாது.

இதுபோன்ற எந்த இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் மக்களை காக்கும் புனித பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டும், முடக்கப்பட்ட சின்னத்தை மீட்டெடுத்து, அம்மாவின் வழியில் ஒன்றரை கோடி கழகத் தொண்டர்களின் கனவை நனவாக்கி, ஒரு இமாலய வரலாறு சிறப்புமிக்க பொற்கால ஆட்சியை நடத்தி வரும், இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், கழக இணை ஒருங்கிணைப்பாளர், எடப்பாடிக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் பாண்டிய நாட்டு பண்பாளர், கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சருக்கும், கழகத்தின் சார்பில் பொற்பாதம் பணிந்து, வணங்கி கோடான கோடி நன்றி மலர்களை காணிக்கையாக செலுத்துகிறோம்.

இவ்வாறு துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறினார்.