தற்போதைய செய்திகள்

1000 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய தொகுப்பு – அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

விழுப்புரம்

விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் 1000 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய தொகுப்புகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் எசாலம் பன்னீர், செ.குன்னத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபா சௌந்தர்ராஜ், முன்னாள் கவுன்சிலர் கலையரசி பக்தவச்சலம் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் செ.குன்னத்தூரில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஒன்றிய செயலாளர் எசாலம் பன்னீர் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., முத்தமிழ்செல்வன், தெற்கு ஒன்றிய செயலாளர் முகுந்தன், நகர செயலாளர் பூர்ணராவ், மாநில பொதுக்குழு உறுப்பினர் காமினி லட்சுமி நாராயணன், ஒன்றிய ஜெ.,பேரவை செயலாளர் சரவணக்குமார், ஒன்றிய துணை செயலாளர் குமார், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கி வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள், இருளர், ஆதரவற்றோர் மற்றும் பொது மக்கள் என 1000 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகை தொகுப்புகளை வழங்கினார்.

மேலும் இதில் ஒன்றிய அவைத்தலைவர் பழனி, ஒன்றிய பொருளாளர் செங்கல்வராயன், பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் துரைமுருகன், முன்னாள் கவுன்சிலர்கள் அய்யாசாமி, திருநாவுக்கரசு, செந்தில்குமார் கிளை செயலாளர் கள் தும்பூர் முருகன், எண்ணாயிரம் கிருஷ்ணன், அன்பரசு, பூங்குணம் சந்திரன், திருநந்திபுரம் சிவசங்கர், மாது ரங்கநாதன், கிருஷ்ணன், நாகராஜ், கருப்பன், வேலு, ராமச்சந்திரன், குமார், சிவன், மணிகண்டன், வங்கித் தலைவர்கள் மணி, நரசிம்மன், வங்கி துணை தலைவர்கள் வேலுமணி, ஓம்சக்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சண்முகசுந்தரம், ராதாகிருஷ்ணன், வீரப்பன், ராமச்சந்திரன், ஆதிசங்கர், நாராயணன், பெரியான் ,மணி,ஆசூர் கர்ணன், பூண்டி ஜெயபால், பொறையாத்தாள் கிருஷ்ணமூர்த்தி, ராயர், இயக்குனர்கள் ரமேஷ், வாசு பிரகாஷ், சுபாகர், நவீன், பிரபு, சேகர், நகர இளைஞரணி பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.