கோவில்பட்டி அ.ம.மு.க.விலிருந்து 200 பேர் விலகல் -முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

தூத்துக்குடி
கோவில்பட்டியை சேர்ந்த அ.ம.மு.க.வினர் 200 பேர் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.
அ.ம.மு.க.விலிருந்து நிர்வாகிகள் விலகி கழகத்தில் இணையும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அ.ம.மு.க.வை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சகாதேவன் ஆகியோர் தலைமையில் 200 பேர் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கோயில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் சின்ராஜ், கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், ஹரிஷ் காந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.