விழுப்புரம்

பரதூர் ஏரி ரூ.60 லட்சத்தில் தூர்வாரும் பணி – குமரகுரு எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

விழுப்புரம்

உளுந்தூர்பேட்டை அருகே ரூ.60 லட்சம் மதிப்பில் பாதூர் ஏரி தூர்வாரும் பணியை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு தொடங்கி வைத்தார்.

உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் கிராமத்தில் ஏரி தூர்ந்துபோய் காணப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாதூர் ஏரியை தூர்வார கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் ரூ.60 லட்சம் நிதியை ஒதுக்கியது. அதைத்தொடர்ந்து பாதூர் ஏரியில் தூர் வாரும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சார் ஆட்சியர் சாய்சாருநிஷா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் செண்பகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா, உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு ஆகியோர் கலந்து கொண்டு ஏரியில் தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர்கள் சம்பத், ஆனந்தன், கழக நிர்வாகிகள் ராஜாராம், நாராயணசாமி, பாதூர் கண்ணன், பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.