மற்றவை

மகளிர் குழுக்களுக்கு ரூ.12 லட்சம் கடன் உதவி – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வழங்கினார்

திருவண்ணாமலை

கலசப்பாக்கம் அடுத்த குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ெகாரோனா கடன் உதவி வழங்கும் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து 15 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.12 லட்சம் கடன் உதவியை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் கொரோனா சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா கூட்டுறவு வங்கி தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நளினி மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு குப்பம் கிராமத்தை சேர்ந்த 15 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் வட்டி இல்லாமல் திருப்பிச் செலுத்தும் வகையில் கடன் உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு முக கவசம் கிருமிநாசினி அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நளினி போளூர் வீட்டு வசதி சங்க தலைவர் பொய்யாமொழி, படைவீடு அன்பு, கழக நிர்வாகிகள், கூட்டுவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.