தற்போதைய செய்திகள்

அம்மா உணவக ஊழியர்களுக்கு நிவாரண பொருட்கள் – மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு வழங்கினார்

சென்னை

பொதுமக்களுக்கு விலையில்லா உணவு வழங்குவதற்காக வடசென்னை வடக்கு மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட கொளத்தூர் தொகுதி மற்றும் வில்லிவாக்கம் தொகுதியில் அடங்கிய 21 அம்மா உணவகங்களுக்கு வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு 20 லட்சம் ரூபாயை வழங்கினார்.

வடசென்னை வடக்கு மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட கொளத்தூர் தொகுதி மற்றும் வில்லிவாக்கம் தொகுதியில் அடங்கிய 21 அம்மா உணவகங்களுக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கொளத்தூர் கே.கணேசன் தலைமையில் வட சென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு பொதுமக்களுக்கு விலையில்லா உணவு வழங்கிட ஏதுவாக 20 லட்சம் ரூபாயை மூன்று கட்டங்களாக மாநகராட்சி அதிகாரிகளிடம் வழங்கினார்.

மேலும் அங்கு சிறப்பாக பணி செய்து வரும் அம்மா உணவக ஊழியர்களுக்கு புடவை அரிசி காய்கறி ஆகிய நிவாரண பொருட்களையும் வழங்கினார். இதன் மூலம் மூன்று வேளையும் ஏழை எளிய மக்களுக்கு விலையில்லாமல் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. அங்கு சாப்பிட வரும் பொதுமக்கள் விலையில்லா உணவு வழங்கியதற்காக கழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ புரசை வி.எஸ்.பாபு, வட்ட செயலாளர்கள் பி.வேலு எம்.சந்திரசேகர் இரா.டில்லி,சி.சந்துரு, பட்மேடு டி.சாரதி, எம்.சந்திரசேகர், வெற்றிநகர் ந.ஜீவா, திருப்புகழ் எஸ்.அண்ணாமலை, எம். ராயப்பன், எ.டி.சாரய்யா, பி.மகேந்திரன், வி.லில்லிகல்பனா உட்பட பலர் கலந்து கொண்டனர்