சென்னை

கோவில் அர்ச்சகர்கள் 500 பேருக்கு நிவாரணம் – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ வழங்கினார்

அம்பத்தூர்

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மாவட்ட கழக செயலாளரும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. தினம்தோறும் ஒவ்வொரு வார்டாக சென்று ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் அடங்கிய 85-வது வார்டு காமராஜபுரம் மங்களபுரம் அம்பேத்கர் திடல் ஓவி அழகேசன் நகர் போன்ற பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு அரிசி பருப்பு எண்ணெய் காய்கறி தொகுப்பு ஆகிய நிவாரணத்தையும், அம்பத்தூர் பகுதி 89-வது வார்டு குமரன் நகர் டி.எஸ்.கிருஷ்ணா நகர், 85-வது வார்டு ஐசிஎப் காலனி, 84-வது வார்டு பட்டரவாக்கம் செல்லியம்மன் கோவில், 81 மற்றும் 80வது வார்டு ஆகிய பகுதியில் உள்ள கோவில் அர்ச்சகர்கள் சுமார் 500 நபர்களுக்கு அரிசி பருப்பு காய்கறி தொகுப்பு ஆகிய நிவாரண பொருட்களை வார்டு வார்டாக சென்று மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்எல்ஏ வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் என்.அய்யனார், அவைத்தலைவர் எஸ்.கிருஷ்ணன், துணை செயலாளர் முகப்பேர் பாலன், பகுதி பொருளாளர் கோதண்டம் மாவட்ட மாணவரணி செயலாளர் எம்.டி.மைக்கேல்ராஜ், மாவட்ட பிரதிநிதி கே.பி.முகுந்தன், டன்லப் வேலன் ,எல்.ஜி.பிரகாஷ், ஹரிகிருஷ்ணன், கே.பாலசுந்தரம், வட்ட செயலாளர் சிவி.மணி, ஜான், மோகன், நிலா ராமன், மணிகண்டன், வெங்கடேசன், எல்.என்.சரவணன், முன்னாள் கவுன்சிலர் ஜி.ஆர்.சீனிவாசன், கே.எம்.வித்யாலக்ஷ்மி, திருநாவுக்கரசு, கேபிள் ராஜசேகர் மீனா பாண்டியன் ராஜா சிவபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்ட கோயில் அர்ச்சகர்கள் கழக அரசுக்கும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், சட்டமன்ற உறுப்பினர் வி.அலெக்சாண்டருக்கும் மனதார நன்றியை தெரிவித்து கொண்டனர்.