திருவள்ளூர்

கோவில் பணியாளர்களுக்கு நிவாரண தொகுப்பு – சிறுணியம் பி. பலராமன் எம்.எல்.ஏ வழங்கினார்

திருவள்ளூர்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கழகம் சார்பில் கோவில் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் நிவாரண தொகுப்புகளை திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி. பலராமன் வழங்கினார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் வருகின்ற 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கோவில்களையும் மூடப்பட்டதால் வருவாய் இழந்த புரோகிதர்களுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்களுக்கு கொரோனா வைரஸ் நிவாரண தொகுப்பாக தலா 10 கிலோ அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் சிறப்பு ஊக்கத்தொகையாக 2000 ரூபாயை திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் வழங்கினார்.

அப்போது கூட்டுறவு கடன் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர் மோகன வடிவேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம்,பேரூர் கழக செயலாளர் உபயதுல்லா, பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை,முன்னாள் பேரூராட்சி தலைவர் சங்கர் ,வழக்கறிஞர் பிரிவு திருமலை, அருள், இளையராஜா, மாரி ,வேலு,நடராஜன், கிரேன்,துர்கா பிரசாத்,ஸ்ரீதர், நாகராஜ், ஆகியோர் உடனிருந்தனர்