தற்போதைய செய்திகள்

லாடப்பாடி கிராமத்தில் ஏரி புனரமைக்கும் பணி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த லாடப்பாடி கிராமத்தில் ரூ.47.25 லட்சம் மதிப்பில் ஏரியை புனரமைக்கும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2020-21ம் ஆண்டு திட்டப்பணியின் கீழ் ரூ.47.25 லட்சம் மதிப்பீட்டில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த லாடப்பாடி கிராமத்தில் உள்ள ஏரியை புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

அப்போது அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறுகையில், லாடப்பாடி பகுதிவிவசாயிகள் கோரிக்கையினை ஏற்று முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்றதின் பேரில் முதல்வர் குடிமராமத்துப்பணி திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்ய ஆணையிட்டதின் பேரில் லாடப்பாடி கிராமத்தில் உள்ள ஏரி ரூ.47.25 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் லாடப்பாடி ஏரி 1340 மீட்டர் கரையை பலப்படுத்துதல், இரண்டு மதகுகள் கட்டப்படவுள்ளது.

இரண்டு கலுங்கல் சீர்செய்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையினை பலப்படுத்துதல், பாசனக்கால்வாய் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படவுள்ளது. பணிகள் முடிவடைந்ததும் 89.84 ஹெக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் ஆரணி சட்டமன்ற தொகுதியில் 11 ஏரிகள் ரூ.6.59 கோடி மதிப்பீட்டில் முதல்வரின் ஆணைக்கிணங்க குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், அரசு வழக்கறிஞர் க.சங்கர், மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, நகர செயலாளர் எ.அசோக்குமார், மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் அரையாளம் எம்.வேலு, மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன், பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், மேற்கு ஆரணி ஒன்றியக்குழுத்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர்கள் அ.கோவிந்தராசன், ப.திருமால், எஸ்.வி.நகரம் முன்னாள் தலைவர் என்.வாசு, ஒப்பந்ததரார் மாமண்டூர் செல்வம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் மகேந்திரன் உதவி செயற்பொறியாளர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.