தற்போதைய செய்திகள்

கடலூர் நகர கழக நிர்வாகிகள் 650 பேருக்கு நிவாரணம் – அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

கடலூர்

கடலூர் மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் கடலூர் நகர கழக நிர்வாகிகள் 650 பேருக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

கடலூர் மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் கடலூர் நகர கழக நிர்வாகிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் மத்திய மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் நகர கழக செயலாளர் ஆர்.குமரன் தலைமை தாங்கினார்.

கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.பழனிசாமி, மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் கே.காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் கலந்து கொண்டு கடலூர் நகர கழக நிர்வாகிகள் 650 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி தலைவர் கெமிக்கல் ஆர்,மாதவன், நகர கழக துணை செயலாளர் வ.கந்தன், மாவட்ட மாணவரணி செயலாளர் கலையரசன், மாவட்ட பிரதிநிதிகள் ஆர்.வி.மணி, ஆர்.வெங்கட்ராமன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காடாம்புலியூர் தேவநாதன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஏ.கே.சுப்பிரமணியம். மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் ஆர்.வி.ஆறுமுகம், நகர அவைத்தலைவர் எம்ஜிஆர் என்கிற ராமச்சந்திரன், பொருளாளர் தனசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் எஸ்,வி,ராதாகிருஷ்ணன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் கே.தமிழ்செல்வன், அன்பு, பிருந்தாசங்கர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.