தற்போதைய செய்திகள்

திருக்கோவிலூரில் 230 மகளிர் குழுவினர்களுக்கு ரூ.2.15 கோடி கடனுதவி – அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

விழுப்புரம்

திருக்கோவிலூரில் 230 மகளிர் சுயஉதவி குழுவினர்களுக்கு ரூ.2.15 கோடி கடனுதவிகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

ஊரடங்கை முன்னிட்டு மகளிர் சுயஉதவி குழுவினர்களுக்கு கூட்டுறவுத்துறை மூலம் கடனுதவி வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருக்கோவிலூரில் கூட்டுறவுத்துறை சார்பில் மகளிர் சுயஉதவி குழுவினர்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தலைமை தாங்கினார்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், உளுந்தூர் பேட்டைதொகுதி சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு, கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபு, மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன், விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி ரகுராமன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பாலகிருஷ்ணன், கூட்டுறவு சர்க்கரை இணையத்தலைவர் ராஜசேகர், கோட்டாட்சியர் சாய்வர்தினி, தாசில்தார் சிவசங்கரன், முன்னாள் மாவட்ட செயலாளர் கதிர்தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளரும், கூட்டுறவு விற்பனை சங்க தலைவருமான பழனி மற்றும் நகர செயலாளர் சுப்பு ஆகியோர் வரவேற்றனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டம், நீதிமன்றங்கள், சிறைத்துறை மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு 230 மகளிர் சுயஉதவி குழுவினர்களுக்கு ரூ.2 கோடியே 15 லட்சம் கடனுதவிகளை வழங்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்களான பழனிச்சாமி, ராஜேந்திரன், மணிராஜ், முன்னாள் திருக்கோவிலுர்ர் சட்டமன்ற உறுப்பினர் லட்சாதிபதி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அசோகன், மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை தலைவர் சந்தோஷ், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் சம்பத், ஜெயபால், வக்கீல்கள் உமாசங்கர், ஆதன்ரவி, பாலகிருஷ்ணன், பேரவை செயலாளர் மணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் தமிழரசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் ஏசுபாதம், தங்கராஜ், இளங்கோவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதாவேல்முருகன், அம்மா பேரவை நிர்வாகி சுபாஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பாலாஜி, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மலர்விழி நன்றி கூறினார்.