தமிழகம்

நாமக்கல் மாணவி அபிநயா நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல ரூ 2 லட்சம் – முதலமைச்சர் வழங்கினார்

சென்னை 

இந்திய அளவில் இணையம் வாயிலாக 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்ற அறிவியல் தேர்வில் பங்கேற்று வெற்றிபெற்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி அபிநயா, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லவும், சர்வதேச விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்க ஏதுவாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை உதவித்தொகையாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அபிநயாவிற்கு வழங்கினார்.