தற்போதைய செய்திகள் திருப்பூர்

மக்களை குழப்பும் வகையில் ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார் – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கடும் தாக்கு

திருப்பூர்

முதலமைச்சருக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதைக் கண்டு ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை அதனால் தான் இதுபோன்ற மக்களை குழப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டு வருகிறார் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறி உள்ளார்.

திருப்பூர் புறநகர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி தெற்கு-2 ஒன்றியம் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வசிக்கும் 500 ஏழை எளிய குடும்பங்களுக்கு முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும் பேரூராட்சி கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளருமான என்.கார்த்திகேயன் ஏற்பாட்டின் பேரில் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி வகைகள் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கழகத்தின் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக் காக நிவாரணம் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த வேளையில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்டத்தில் வாழும் மக்களை நேரிடையாக சந்தித்து உணவிற்கு தேவையான அத்தியாவசியப்பொருட்களை வழங்கி வருகிறோம். இந்த கொடிய கொரோனா வைரஸ் கிருமி மக்களை இம்மி அளவிலும் நெருங்கிவிட கூடாதென்பதில் கழக அரசு விழிப்புடன் செயல்படுகிறது.

இந்த நேரத்தில் மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதால் நாங்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று காய்கறிகள் மற்றும் அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களை வழங்கி வருகிறோம். ஆனால் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் மக்களைப் பற்றி சிந்திக்காமலும், இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முதலமைச்சர் இரவு பகல் பாராது உழைத்து மக்களுக்கு பணியாற்றியது பற்றி உணராமலும் தினந்தோறும் பொய்யான அறிக்கையை வெளியிட்டு வருகிறார்.

மக்களுக்காக ஸ்டாலின் எதுவும் செய்ய மாட்டார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். முதலமைச்சருக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதைக் கண்டு ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை அதனால் தான் இதுபோன்ற மக்களை குழப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டு வருகிறார். இதற்கெல்லாம் மக்கள் தகுந்த பாடத்தை விரைவில் திமுகவிற்கு வழங்குவார்கள்.

இவ்வாறு துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் மு.இளஞ்செழியன், பேரூராட்சி கழக செயலாளர் சுந்தரராஜ், பேரூராட்சி கழக அவைத்தலைவர் கபீர் பாய், வார்டு செயலாளர்கள் ஆட்டோ கமால், பாலு, சபரிராஜ், பேரூராட்சி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் குப்புசாமி, மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி பாலு, சி.டி.சி.ரவி, அம்மா வெள்ளியங்கிரி, கதிர்வேல், அம்மாதாஜ், ஆறு, வேல், சந்திரசேகர், டாஸ்மாக் மகாலிங்கம், மோதிராபுரம் வேலு, செல்வராஜ், சிவக்குமார், ரவி, நாராயணன், முகம்மது, பாய், ரபிக், தியாகு, நாகராஜ், நாகமாணிக்கம், சர்தார், துரைசாமி, குணா, மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.